கூடலூர் 1-ம் மைல் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் சமையல் வேலைகளை கவனிக்க முடியாமல் இல்லத்தரசிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் மாணவ-மாணவிகள் பாடம் படிக்க முடிவதில்லை. இது தவிர கொசுத்தொல்லையும் அதிகரிக்கிறது. எனவே மின்தடை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.