நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி மேல தெருவில் கடந்த ஒரு ஆண்டாக மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மின் கம்பிகளில் உரசி தீ விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். சிறுவர்-சிறுமிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பிகள் செல்வதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மருங்கூர்