சேதமடைந்த மின் கம்பம்

Update: 2022-07-23 13:08 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் திருக்கண்ணபுரம்-திருவாரூர் சாலையில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் எதிரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றியமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்கள், திருக்கண்ணபுரம்

மேலும் செய்திகள்