பந்தலூர் அருகே உள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் மேங்கோரேஞ்ச் முதல் அருகில் உள்ள குஞ்சம்பாடி வரை தெருவிளக்குகள் ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்வோ அல்லது புதிய தெருவிளக்குகள் அமைக்கவோ அதிகாரிகள் முன்வர வேண்டும்.