மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-22 14:23 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி ஊராட்சி வீரபெருமாநல்லூர் காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கீழத்தெருவிற்கு செல்லும் மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.மின்கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அருகில் வசிப்பவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.மேலும் வேகமாக காற்று வீசுவதால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அருகில் உள்ள குடுசை வீடுகளில் தீவிபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்