அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி வழியாக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது . இந்த சாலையில் தேளூர் பிரிவு பாதைக்கு தென்புறத்தில் சர்வீஸ் சாலையில் உயர் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அவைகளில் சில வாரங்களாக நான்கு மின்விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளது. இவ்வழியே செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால் வடபுறத்தின் வழியாக தேளூர், குடிசல் கிராமங்களுக்கு செல்லும் பொது மக்களும், தென்புறத்தில் உள்ள கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சாலை கடக்க மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. மேலும் கயர்லாபாத் போலீஸ் நிலையத்திலிருந்து விளாங்குடி வரை இந்த சாலையில் மின்வாரிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.