சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2023-04-30 16:38 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த கோவில்பாறை கிராமத்தில் மெயின் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்