பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் தெருவிளக்கு எதுவும் இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தவும், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.