ஓவேலி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து பெரிய சோலை செல்லும் முக்கிய சாலையின் குறுக்கே பல இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பஸ், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது உரசும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குறிப்பிட்ட வழித்தடங்களில் ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் இடங்களில் உள்ள மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.