தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-12-21 12:24 GMT

தேவர்சோலை பேரூராட்சி செருமுள்ளியில் இருந்து மண்வயலுக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் மரக்கிளைகளிலும் உரசி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு நடத்தி மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்