தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2022-11-27 10:34 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் சின்னபெரமன்காடு பகுதியில் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

மின்தடை