மின் விளக்கு பொருத்தப்படுமா?

Update: 2022-07-17 11:01 GMT

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்திலிருந்து ,புனவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்தவழியாக வேலைக்கு சென்று விட்டு நடந்து வரும் பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருவோர் வழிப்பறி ஏதும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்