பெரம்பலூர் நகர் பகுதியில் எவ்வித முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.