பயன்பாட்டிற்கு வராத மின்மாற்றி

Update: 2022-07-16 16:56 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூர் கிராமத்தில் உள்ள தேவேந்திர குல தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சரியான முறையில் மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததை அடுத்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டது. மின்மாற்றி அமைக்கப்பட்டும் இணைப்பு வழங்காததால் சீரான மின்சார வினியோகம் இன்றி இப்பகுதியில் அடிக்கடி மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.சிறுவயலூர்

மேலும் செய்திகள்