இருளில் மூழ்கி கிடக்கும் சத்துணவு கூடம்

Update: 2022-09-16 14:21 GMT

தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரை அடுத்த  இடையக்காடு தெருவுக்கு உட்பட்ட  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுக்குளம் அருகே செயல்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சத்துணவு கூடம் உள்ளது. இந்த கூடத்தில் முறையான மின் இணைப்புகள் இல்லை. இதனால் ஊழியர்கள் இருளில் சமையல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளியின் சத்துணவு கூடத்துக்கு மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

மின்தடை