6 Oct 2024 10:41 AM GMT
#50299
குடிநீர் கிடைக்குமா?
அடையாறு
தெரிவித்தவர்: சிவா
சென்னை அடையாறு, வெங்கட்ரத்தினம் நகர் மற்றும் கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மெட்ரோ குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உடனே குடிநீர் வாரிய அதிகாரிகள் இந்த பகுதியில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.