1 Sep 2024 9:18 AM GMT
#49443
குளம் போல் தேங்கும் மழைநீர்
கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை மாநகராட்சி 99-வது வார்டு பகுதியில் நூலகம் ஒன்று உள்ளது. இங்கு செல்லும் வழியில் மழை பெய்தால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பலரும் வலுக்கி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். எனவே அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
மனோகரன், கோணவாய்க்கால்பாளையம்.