9 Jun 2024 11:03 AM GMT
#47291
ஆகாய தாமரை அகற்றப்படுமா?
பொன்மார்
தெரிவித்தவர்: குணா
செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் ஊராட்சியில் ஒரு சிறிய குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் ஆகாய தாமரை அடர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் குளத்து தண்ணீர் வற்றுவதுடன், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொன்மார் ஊராட்சி தலைவர் குளத்தில் உள்ள ஆகாயத் தாமரையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.