26 July 2023 10:08 AM GMT
#36845
குடிநீர் குழாயில் உடைப்பு
Zamin uthukuki
தெரிவித்தவர்: Ram
பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி குஞ்சிபாளையம் பிரிவில் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய் மூலம் நெகமம் வரை குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. எனவே குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.