Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2023
பிரமோத் | பெங்களூரு
#37344

சாலை பள்ளம் மூடப்படுமா?

மற்றவை

பெங்களூரு இந்திராநகர் 12-வது மெயின் சாலையில் 100 அடி சந்திப்பு பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் பதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அந்த பள்ளம் மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023
பிரமோத் | பெங்களூரு
#37113

பகல் நேரங்களில் ஒளிரும் தெருவிளக்குகள்

பகல் நேரங்களில் ஒளிரும் தெருவிளக்குகள்மற்றவை

பெங்களூரு மாகடி ரோடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தெரு விளக்குகள் உள்ளன. அவற்றில் சில தெரு விளக்குகள் பகல் நேரங்களில் ஒளிரவிடப்படுகின்றன. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இதை கண்காணித்து பகல் நேரங்களில் தெரு விளக்குகளை ஒளிரவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023
பிரமோத் | பெங்களூரு
#37112

குவியும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் சாலையோரம் உள்ள நடைபாதை அருகே குப்பை கழிவுகள் போடப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023
பிரமோத் | பெங்களூரு
#37111

அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

பெங்களூரு மல்லேசுவரம் 6-வது கிராஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு அறிவிப்பு பலகை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன ஓட்டிகள் சிலர் அதை கண்டுகொள்ளாமல் அங்கு வாகனங்களை நிறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீண்டும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படாமல் போக்குவரத்து போலீசார் பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023
பிரமோத் | பெங்களூரு
#37110

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்சாலை

பெங்களூரு லிங்கராஜபுரம் குரிநாராயணப்பா லே-அவுட் பகுதியில் முதல் கிராஸ் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களின் மோட்டார் சைக்கிள்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர் இதனால் அந்த சாலையில் நடந்து செல்வதற்கு கூட வழியில்லை. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023
பிரமோத் | பெங்களூரு
#37109

நடைபாதையில் ஓட்டப்படும் மோட்டார் சைக்கிள்கள்

மற்றவை

பெங்களூரு கே.ஆர்.புரம் மேம்பாலம் அருகே உள்ள சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள நடைபாதையில் மோட்டார் சைக்கிள்களை சிலர் ஓட்டி செல்கின்றனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் சாலைகளில் இறங்கி அவர்கள் நடந்து செல்லும்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023
பிரமோத் | பெங்களூரு
#36926

சேதமடைந்த கண்காணிப்பு கேமரா

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் கோபாலபுரம் 4-வது 'எம்' பிளாக் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அதில் ஒரு கேமரா உடைந்து கம்பத்தில் தொங்கிய வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023
பிரமோத் | பெங்களூரு
#36925

வடிகால் மூடியால் ஆபத்து

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக் மாகடி மெட்ரோ ரெயில் நிலையம் செல்லும் சாலையில் சாக்கடை வடிகால் ஒன்று உள்ளது. இந்த வடிகாலின் மேல் பகுதியில் சிமெண்டு மூடி போடப்பட்டுள்ளது. ஆனால் வடிகால் பகுதிக்கு மேல் வெளியே தெரியும் வண்ணம் மூடி உள்ளதால், அதை தாண்டி செல்லும்போது முதியவர்கள் தவறுதலாக கால் தவறி விழுகின்றனர். எனவே அதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023
பிரமோத் | பெங்களூரு
#36924

சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 38-வது கிராஸ் 10-வது மெயின் சாலையில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த உபகரணங்கள் தற்போது சேதமடைந்து உள்ளன. இதனால் சிறுவர்களால் விளையாட முடியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. எனவே அதன் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023
பிரமோத் | பெங்களூரு
#36922

குப்பை கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பை

பெங்களூரு ஜக்கூர் புறநகர் பகுதியில் சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அந்த பகுதியே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் காற்றில் குப்பை கழிவுகள் சாலையில் சிதறுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023
பிரமோத் | பெங்களூரு
#36921

பாழடைந்த பஸ் நிறுத்தம்

மற்றவை

பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த நிறுத்தம் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இதனால் பஸ் ஏறுவதற்காக அங்கு வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் பயணிகள் நனைந்தபடி பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சரிசெய்து கொடுக்க வேண்டுகிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023
பிரமோத் | பெங்களூரு
#36920

இரும்பு தடுப்பால் போக்குவரத்து நெரிசல்

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையின் குறுக்கே கழிவுநீர் வடிகால் ஒன்று உள்ளது. அதன் மேல்பகுதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அதனை சரிசெய்தனர். மேலும் அதன் அருகே இரும்பு தடுப்பு ஒன்றையும் வைத்தனர். பல நாட்கள் ஆகியும் இரும்பு தடுப்பு அகற்றப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick