30 July 2023 2:37 PM GMT
#37109
நடைபாதையில் ஓட்டப்படும் மோட்டார் சைக்கிள்கள்
கே.ஆர்.புரம்
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு கே.ஆர்.புரம் மேம்பாலம் அருகே உள்ள சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள நடைபாதையில் மோட்டார் சைக்கிள்களை சிலர் ஓட்டி செல்கின்றனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் சாலைகளில் இறங்கி அவர்கள் நடந்து செல்லும்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.