Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 July 2022 2:22 PM GMT
| பத்மனாபபுரம்
#1392

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட தும்பகோடு அலெக்சாண்டர்புரம் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-இன்பராஜ், தும்பகோடு.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட தும்பக்கோடு அலெக்சாண்டர்புரத்தில் விளையாட்டு ைமதானம் உள்ளது. இந்த மைதானத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 10:54 AM GMT
| நாகர்கோவில்
#1346

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

கோட்டார், ஈத்தாமொழி சந்திப்பில் இருந்து செட்டிகுளம் வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டேவிட்சன், புத்தளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 10:52 AM GMT
| நாகர்கோவில்
#1345

கழிவுகளை அகற்ற வேண்டும்

கழிவுகளை அகற்ற வேண்டும்குப்பை

நாகர்கோவில் மாவட்ட கோர்ட்டு அருகே முத்தமிழ் தெரு உள்ளது. இந்த தெருவில் கழிவுநீர் ஓடை தூர்வாரப்பட்டு அதன் அருகிலேயே கொட்டப்பட்டு உள்ளது. மேலும், தெருவில் உள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பின் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஓடையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், நாகர்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 10:49 AM GMT
| பத்மனாபபுரம்
#1344

நடவடிக்கை ேதவை

போக்குவரத்து

குலசேகரத்தில் இருந்து குளச்சலுக்கு தடம் எண் 332 கொண்ட அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் நடுப்பகுதியில் வலது பக்க இருக்கை ஒன்றின் பின்புறம் ஆபாசமான வார்த்தைகள் சமூக விரோதிகளால் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த வார்த்தைகளை அழிக்கவும், இதுபோன்று எழுதுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தேவசகாயம், குலசேகரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 10:41 AM GMT
| கன்னியாகுமரி
#1343

செடிகளை அகற்ற வேண்டும்

செடிகளை அகற்ற வேண்டும்சாலை

கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் உள்ளது. இந்த சாலையின் தெற்கு பகுதியில் முட்செடிகள் உள்ளிட்டவை வளர்ந்து சிறு காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் விஷ பாம்புகள் தஞ்சமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், அந்த பகுதியில் சிலர் குப்பைகளையும் கொட்டி தீவைப்பதால், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, முட்செடிகளை அகற்றி அங்கு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 5:52 PM GMT
| இலால்குடி
#1319

ஆபத்தான மின்கம்பிகள்

ஆபத்தான மின்கம்பிகள்மின்சாரம்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆதிகுடி ஊராட்சி மாரியம்மன் கோவில் எதிரில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பிகள் மரக்கிளைகளில் உரசியவாறு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 5:48 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#1316

ஆபத்தான பாதாள சாக்கடை மூடி

ஆபத்தான பாதாள சாக்கடை மூடிசாலை

திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 7-வது மெயின் ரோடு அருகே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மூடி உடைந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 2:36 PM GMT
| கிள்ளியூர்
#1283

சுகாதர சீர்கேடு

சுகாதர சீர்கேடுகழிவுநீர்

கீழ்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காளியார்தோட்டம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், விழுந்தயம்பலம் பகுதியில் இருந்து சானல் வழியாக வரும் தண்ணீர் சாலையில் பாய்கிறது. சில நேரங்களில் இறந்த உயிரினங்களும் அடித்து வரப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகுிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வடிகால் ஒடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பால்ராஜ், அரசகுளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 11:44 AM GMT
| கன்னியாகுமரி
#1261

சீரான குடிநீர் தேவை

சீரான குடிநீர் தேவைதண்ணீர்

தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மண்ணடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 12:03 PM GMT
| குளச்சல்
#1260

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்மின்சாரம்

வில்லுக்குரி பேரூராட்சி பண்டாரகாடு ஸ்டார் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்று ஒகி புயலின்போது சேதமடைந்தது. அதன்பிறகு அந்த கம்பத்தின் அருகில் புதிய மின்கம்பமும் அமைக்கப்பட்டது. ஆனால், சேதமடைந்த மின்கம்பம் இதுவரை அகற்றப்படவில்லை. மேலும், அந்த கம்பத்தில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 1:41 PM GMT
| நாகர்கோவில்
#1259

ஆபத்தான தெரு விளக்கு

ஆபத்தான தெரு விளக்குமின்சாரம்

ஆபத்தான தெரு விளக்கு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை சானல் கரையில் அமைந்துள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு சேதமடைந்து தொங்கியபடி காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்வோர் மீது விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சேதமடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆன்ரோ டெகோசிங் ராஜன்,வேதநகர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

சீரமைக்கப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை சானல் கரையில் அமைந்துள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு சேதமடைந்து தொங்கியபடி காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்வோர் மீது விழுந்து விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதிகள் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 11:32 AM GMT
| நாகர்கோவில்
#1257

பயணிகள் அவதி

பயணிகள் அவதிமற்றவை

நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள் அருகில் உள்ள வாகன நிறுத்தம் வழியாக நடந்து செல்வது வழக்கம். மழை நேரங்களில் பயணிகள் இறங்கும் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் ேதங்கி காணப்படுகிறது. இதனால், பயணிகள் பள்ளத்தை கடந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்நிறுத்தம் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick