Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 July 2022 6:50 AM GMT
| சிங்காநல்லூர்
#1996

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிசாலை

குண்டும், குழியுமான சாலைகோவை தண்ணீர் பந்தலில் கொடிசியா செல்லும் மெயின் ரோடு மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அங்கு அதிக அளவு புழுதி பறக்கிறது. இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையை செப்பனிட வேண்டும்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

கோவை தண்ணீர் பந்தலில் இருந்து கொடிசியா செல்லும் மெயின் ரோடு மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அங்கு அதிகளவில் புழுதி பறக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்த சாலையை விரைவாக செப்பனிட வேண்டும்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 6:25 AM GMT
| கூடலூர்
#1995

மண்சரிவு அகற்றப்படுமா?

மண்சரிவு அகற்றப்படுமா?சாலை

கூடலூரில் தொடர் மழை காரணமாக நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த மண்சரிவு ஏற்பட்டு, 5 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இன்னும் மண்சரிவு அகற்றப்படவில்லை. இதனால் பாதசாரிகள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல், சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நடைபாதையில் ஏற்பட்டு உள்ள மண்சரிவை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 2:36 PM GMT
| கன்னியாகுமரி
#1885

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவைமின்சாரம்

அழகியபாண்டியபுரம் மேல்கரை காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் காற்றின் வேகத்தில் முறிந்து அருகில் உள்ள மரத்தின் மீது விழுந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் மின்கம்பம் அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பதை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.வேலுச்சாமி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 2:11 PM GMT
| நாகர்கோவில்
#1880

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

பறக்கை-மணக்குடி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடை சீரமைப்பின்போது குடிநீர் குழாய் சேதமடைந்து சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். -பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 2:05 PM GMT
| சேலம்-வடக்கு
#1878

மரங்களுக்கு இடையூறாக இரும்பு தடுப்புகள்

மரங்களுக்கு இடையூறாக இரும்பு தடுப்புகள்மற்றவை

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் பஸ் மோதியதில் சேதம் அடைந்தது. அந்த இரும்பு தடுப்புகள் பழைய நாட்டாமை கழக கட்டிடம் முன்பு போடப்பட்டுள்ளன. இது அங்கு நடப்பட்டுள்ள மரங்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சேதம் அடைந்த இரும்பு தடுப்புகளை அகற்ற நடவடிக்கை வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 1:01 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#1862

வெள்ளத்தால் சாலையில் அரிப்பு

சாலை

கோவைப்புதூர் அறிவொளி நகர் செல்லும் சாலை மழை வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 12:55 PM GMT
| குன்னூர்
#1860

கூடுதல் உழவர் சந்தை வேண்டாம்

மற்றவை

கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள 60 கடைகளை அகற்றிவிட்டு, அங்கு கூடுதலாக 2-வது உழவர் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கடைகளை இழக்கும் 60 வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்த நடவடிக்கையை கைவிடுவதுடன், ஏற்கனவே உள்ள உழவர் சந்தையை மேம்படுத்தி மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 12:52 PM GMT
| குன்னூர்
#1859

பழுதடைந்த சாலை

சாலை

கோத்தகிரி காந்தி மைதானத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பழுதடைந்துள்ள அந்த சாலையை புதுப்பிக்கவோ அல்லது புதிதாக அமைக்கவோ பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 12:50 PM GMT
| உதகமண்டலம்
#1858

சாலையில் செல்லும் கழிவுநீர்

சாலையில் செல்லும் கழிவுநீர்கழிவுநீர்

ஊட்டி ஹில்பங்க் பகுதியில் கடந்த சில நாட்களாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையோரம் கழிவுநீர் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 12:48 PM GMT
| உதகமண்டலம்
#1857

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஊட்டி கமர்சியல் சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 12:15 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#1848

சுகாதார சீர்கேடு

குப்பை

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 11:55 AM GMT
| குன்னூர்
#1846

யானைகள் வழித்தடத்தில் கம்பிவேலி

மற்றவை

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பல பகுதிகளில் யானைகள் வழித்தடங்கள் உள்ளன. இதில் முள்ளூர் பகுதியில் யானைகள் வழித்தடத்தை மறித்து தனியார் எஸ்டேட்டை சுற்றிலும் சுமார் 15 அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் யானைகள் வனப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சாலைகளில் நடமாடி வருகின்றன. எனவே யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick