Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 July 2022 12:13 PM GMT
| சேலம்-தெற்கு
#2203

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாமா?

மற்றவை

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை செய்தது. இந்தநிலையில் சேலத்தில் உள்ள மளிகை கடை, ஓட்டல், மார்க்கெட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து முழுமையாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.-பொதுமக்கள், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 12:09 PM GMT
| பத்மனாபபுரம்
#2188

ஆபத்தான மரம்

ஆபத்தான மரம்மற்றவை

திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட தும்பகோடு பகுதியில் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் ஏராளமான குடிசைகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு வீட்டின் அருகில் பழமையான மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் பெரிய துவாரம் போன்று காணப்படுகிறது. சூறைக்காற்று வீசும் போது மரம் முறிந்து அருகில் உள்ள வீடுகளின் மீது விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழமையான மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -எப்.சுதா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 11:44 AM GMT
| வேலூர்
#2183

காட்பாடி காந்திநகருக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

காட்பாடி-பாகாயம் செல்லும் 1, 2-ம் நம்பர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சில மண்டபம், டான்போஸ்கோ பள்ளிக்கூடம், ரவுண்டானா ஆகிய பஸ் நிறுத்தம் வழியாக காந்திநகருக்குள் வருவது இல்லை. நேராக சென்று விடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் ஓடைபிள்ளையார் கோவில், சில்க்மில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி காந்திநகருக்குள் உள்ளே நடந்து செல்ல ேவண்டி உள்ளது. எனவே அனைத்துப் பஸ்களும் மேற்கண்ட நிறுத்தங்கள் வழியாக காந்திநகருக்குள் வந்து செல்ல வேண்டும். -பொதுமக்கள், காந்திநகர் காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 11:16 AM GMT
| நாமக்கல்
#2176

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மசாமி கோவில் உள்ளிட்டவை உள்ளன. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.ஜி.ஆர். நினைவு சாலை வழியாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 7:54 AM GMT
| கன்னியாகுமரி
#2168

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் முகப்பு நுழைவாயிலின் எதிரே ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் இரண்டு பக்கமும் பொதுமக்கள் செல்வதற்காக நடைபாதை உள்ளது. இதில் வலது பக்கம் உள்ள பாதையில் குப்பைகள், கழிவுநீரை கொட்டி வருகிறார்கள். மேலும், மண்டபத்தில் சிலர் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களைஅங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள், மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 4:36 PM GMT
| கரூர்
#2132

பட்டுப்போன மரம்

பட்டுப்போன மரம்மற்றவை

கரூர் தான்தோன்றிமலை பிரதான சாலையில் இருந்து பொன்நகர் செல்லும் இணைப்புச் சாலையில் ரேஷன் கடை மற்றும் கேஸ் குடோன் ஆகியவற்றுக்கு எதிரில் ஒரு பட்டுப்போன பெரிய மரம் இருக்கிறது. தற்போது பலத்த காற்று அடிப்பதினால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:23 PM GMT
| ஜெயங்கொண்டம்
#2107

நோய் பரவும் அபாயம்

மற்றவை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தூய்மை பணியை மேற்கொள்ளும்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தூய்மை பணியை மேற்கொள்வதால் இவர்களால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் அவர்களுக்கும் நோய் தாக்கும் சூழல் உள்ளதால் கையுறை, கால்உறை, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மை பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 12:14 PM GMT
| சேலம்-வடக்கு
#2041

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலை

சேலம் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட காந்தி ரோட்டில் இருந்து ஜான்சன்பேட்டை செல்லும் வழியில் ரோடு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிஷோர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 11:21 AM GMT
| குன்னூர்
#2029

மோட்டார் பழுதை நீக்க வேண்டும்

தண்ணீர்

கோத்தகிரி சக்திமலையில் ரூ.10½ கோடியில் கொண்டு வரப்பட்ட அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட சில நீர் உந்து அறைகளில் மின் மோட்டார்கள் பழுதடைந்து உள்ளன. இதனால் கடந்த ஒரு ஆண்டாக சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது தடைபட்டுள்ளது. எனவே விரைந்து மின் மோட்டார்களை பழுது நீக்கி குடிநீர் வினியோகத்தை சீராக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 11:04 AM GMT
| நாமக்கல்
#2023

கோபுர விளக்கு எரியவில்லை

சாலை

நாமக்கல் மாவட்டம் செல்லப்பகவுண்டர் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை அருகே உயர்மின் கோபுர விளக்கு ஒன்று உள்ளது. அதில் ஒரு சில விளக்குகள் மட்டுமே எரிகின்றன. சில விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது. எனவே அதை சரி செய்து அனைத்து விளக்குகளும் எரிய செய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 10:36 AM GMT
| சேலம்-வடக்கு
#2010

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சங்கர் நகரில் இருந்து நடேசன் காலனி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் வாகனங்கள் குழிகளில் ஏறி இறங்கும் போது தட்டுத்தடுமாறி செல்கின்றன. இதேபோல் சில இடங்களில் சாலையோரத்தில் மரக்கிளைகள் தாழ்வாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்து மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 9:58 AM GMT
| நாகர்கோவில்
#2008

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்கழிவுநீர்

கீழஆசாரிபள்ளம் 11-வது அன்பியத்திற்கு உட்பட்ட குறுக்குத்தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால், மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் தொற்று நோய் பரவ வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைத்து சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஆ.ஆன்றணி சதீஷ் , ஆசாரிபள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick