Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 July 2022 4:19 PM GMT
| தஞ்சாவூர்
#2458

வேகத்தடை வேண்டும்

வேகத்தடை வேண்டும்சாலை

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையில் பஸ் நிறுத்தம் அருகே பள்ளிகள், அங்கன்வாடி மையம், திருமண மண்டபம் ஆகியவை உள்ளது. இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 4:04 PM GMT
| கோலார்
#2456

குண்டும், குழியுமாக கிடக்கும் சாலை

மற்றவை

கோலார் தங்கவயல் பகுதியில் ஆண்டர்சன்பேட்டையில் இருந்து ராபர்ட்சன்பேட்டை வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. பல கோடி ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று கூறி வரும் தொகுதி எம்.எல்.ஏ. இதுவரை சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவில்லை. சாலைகள் பழுதடைந்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் அந்த சாலைகளை சீரமைக்க முன்வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 4:03 PM GMT
| கோலார்
#2455

பஸ் நிலையத்தின் காலி இடத்தில் சிறுநீர் கழிக்கும் அவலம்

மற்றவை

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அரசு பஸ் நிலையத்தில் கர்மவீரர் காமராஜரின் முழுஉருவ சிலை உள்ளது. இதன் பின்புறம் நகரசபைக்கு சொந்தமான 2 கடைகள் உபயோகத்தில் இல்லாமல் பாழடைந்துள்ளன. இந்த கடைகளுக்கு அருகே உள்ள காலி இடத்தில் சிலர் சிறுநீர் கழிப்பதும், மதுபானம் அருந்தி பாட்டிலை வீசியும் செல்கின்றனர். இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு அந்தப்பகுதி வரும் பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே, நகரசபை நிர்வாகம் காலி இடத்தில் தடுப்பு வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 4:03 PM GMT
| பெங்களூரு புறநகர்
#2454

சாலை பணிகளால் வீடுகளுக்குள் புகும் தண்ணீர்

மற்றவை

பெங்களூரு கோரமங்களா 4-வது பிளாக் 60 அடி ரோட்டில் மாநகராட்சி சார்பில் சாலை விரிவாக்க பணி, நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் அருகே உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கஷ்டத்தை புரிந்து கொண்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 4:03 PM GMT
| பெங்களூரு
#2453

ஒரே இடத்தில் ஒரு மாதமாக நிற்கும் லாரி அப்புறப்படுத்தப்படுமா?

சாலை

பெங்களூரு மேடஹள்ளி பார்வதிநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தமிழக பதிவெண் கொண்ட ஒரு லாரி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 2:02 PM GMT
| உதகமண்டலம்
#2402

ஊட்டி ஏரி தூர்வாரப்படுமா?

ஊட்டி ஏரி தூர்வாரப்படுமா?கழிவுநீர்

ஊட்டியில் படகு இல்லம் செயல்பட்டு வரும் ஏரியில் சேறும், சகதியும் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக மழை அதிகளவில் பெய்யும்போது, கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைக்கு தண்ணீர் வருகிறது. கால்வாய் தூர்வாரப்பட்டாலும், ஏரி தூர்வாரப்படுவது இல்லை. எனவே ஏரியை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:33 PM GMT
| உதகமண்டலம்
#2400

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?

தண்ணீர்

ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. பார்சன்ஸ் வேலியில் இருந்து தண்ணீர் வரும் குழாயில் அதிக இடங்களில் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் பாதிப்பு மேலும் அதிகமாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 10:51 AM GMT
| குன்னூர்
#2358

காட்டுப்பன்றிகள் தொல்லை

காட்டுப்பன்றிகள் தொல்லைமற்றவை

கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஏராளமான காட்டுப்பன்றிகள் முகாமிட்டுள்ளன. இதனால் அங்கு விளையாட்டு பயிற்சி செய்வோரும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் காட்டுப்பன்றிகள் தங்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்துடன் பயிற்சியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 10:45 AM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#2356

தேங்கி நிற்கும் மழைநீர்

தேங்கி நிற்கும் மழைநீர்சாலை

கோவை மாநகராட்சி 76-வது வார்டு எல்.ஐ.சி. காலனியில் குடியிருப்புக்கு மத்தியில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் சென்று வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 11:32 AM GMT
| கன்னியாகுமரி
#2355

குளம் தூர்வாரப்படுமா?

குளம் தூர்வாரப்படுமா?மற்றவை

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னையடி‌ பகுதியில் வால்குளம் உள்ளது. என்.பி.சானலின் கிளை கால்வாய் மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த குளத்தை புன்னையடி பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் ஆகாய தாமரைகள் வளர்ந்து வயல்வெளி போல் காணப்படுகிறது. இதனால், குளம் நிரம்பி இருந்தும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 5:58 PM GMT
| துறையூர்
#2315

மேம்பாலம் கட்டப்படுமா?

மேம்பாலம் கட்டப்படுமா?மற்றவை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட விசுவை தெற்கு- பாலகிருஷ்ணம்பட்டிக்கு இடையே எதுமலுடையான் கோவில் அருகே ஓடும் அய்யாற்றை கடந்து செல்ல இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதினால் அவர்கள் ஆற்றின் அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 4:08 PM GMT
| கரூர்
#2288

தெருநாய்களால் தொல்லை

மற்றவை

கரூர் காந்திகிராமம் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சாலையில் திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி நாய்களின் மீது வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க துரத்துவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick