Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2022 1:45 PM GMT
| தட்சிண கன்னடா
#2601

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. தற்போது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையொட்டி உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் ஒரு அடிக்கு மேல் குழி விழுந்து உள்ளது. இதனால் லாரி டிரைவர்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 1:10 PM GMT
| குன்னூர்
#2591

தெரு விளக்கு தேவை

மின்சாரம்

கோத்தகிரி அரவேனு அருகே உள்ள முடியகொம்பை கிராமத்தில் இருந்து ராப்ராய் செல்லும் சாலையோரம் தெரு விளக்குகள் அமைக்கபடாததால் அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் வனவிலங்கு தாக்குதலுக்கு பயந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த சாலையோரங்களில் தெரு விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்தில், கோத்தகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 12:33 PM GMT
| உதகமண்டலம்
#2585

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

நீலகிரி மாவட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிலர் தினசரி வேலைக்கு வந்து செல்கின்றனர். அவர் வருபவர்களுக்கு வெளியூர்களிலிருந்து குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் நேர விரையம் ஆகிறது. சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடிவதில்லை. எனக்கு கோவை மாவட்டத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:50 AM GMT
| நாமக்கல்
#2565

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் 2 சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணிக்கம், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:08 AM GMT
| சேலம்-மேற்கு
#2546

பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படுமா?

பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படுமா?மற்றவை

சேலம் சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதே பகுதியில் உள்ள சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் தற்போது மிகவும் பழுதடைந்து அதை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏலம் விடுவதற்கோ அல்லது அங்கிருந்து அகற்றுவதற்கோ விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:06 AM GMT
| நாமக்கல்
#2543

தேன் கூடு அகற்றப்படுமா ?

மற்றவை

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திங்கட்கிழமைகளில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க அதிக அளவில் வருவது உண்டு. இந்த நிலையில் 2-வது மாடி சிலாப் பகுதியில் தேன்கூடு ஒன்று கட்டி உள்ளது. இந்த தேன்கூடு கலைந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேனீக்கள் கொட்டி விட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தேன்கூட்டை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாணிக்கம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 11:01 AM GMT
| வீரபாண்டி
#2540

பாதியில் நிற்கும் அரசு கட்டிடம்

பாதியில் நிற்கும் அரசு கட்டிடம்மற்றவை

சேலம் வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டுவதற்காக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணி நிறைவடையாமல் அப்படியே பாதியில் நிற்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊராட்சி அலுவலக பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராஜகிள்ளிவளவன், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 9:45 AM GMT
| உதகமண்டலம்
#2531

குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுமா?

குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுமா?குப்பை

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டி மேடு பகுதியில் சரியாக காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. மேலும் கால்நடைகள் குப்பைகளில் இருக்கிற பிளாஸ்டிக் பொருட்களை தின்பதால் உடல் நலம் பாதிக்கப்படுகின்றன. எனது தேவையான இடங்களை குப்பைத் தொட்டி வைத்து முறையாக குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 9:41 AM GMT
| குன்னூர்
#2530

தினத்தந்தி செய்தி எதிரொலி புதர்ச் செடிகள் வெட்டி அகற்றம்

தினத்தந்தி செய்தி எதிரொலி புதர்ச் செடிகள் வெட்டி அகற்றம்மற்றவை

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை, நடைபாதை ஓரங்களில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை, நடைபாதை ஓரங்களில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் நேற்று புதர் செடிகளை வெட்டி அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த பேரூராட்சி அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:37 PM GMT
| புதுக்கோட்டை
#2493

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மற்றவை

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தம் பகுதியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று வளைந்து, சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை விபத்து ஏற்படும் முன்பு சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:32 PM GMT
| பெரம்பலூர்
#2489

பூட்டிக்கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

மற்றவை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுஅம்மாபாளையத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் மின் மோட்டார் பழுது காரணமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள், சிறுமிகள் இயற்கை உபாதை, சிறுநீரை திறந்த வெளியில் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் மோட்டாரை சரி செய்து மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 5:31 PM GMT
| பெரம்பலூர்
#2488

குட்டையை ஆழப்படுத்த வேண்டும்

தண்ணீர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பழைய விராலிப்பட்டி கிராமத்தின் மேற்கே உள்ள குட்டை தூர்வாராமல் உள்ளது. இதனால் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே அந்த குட்டையை ஆழப்படுத்தியும், மதகை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick