Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2022 1:09 PM GMT
| இராஜபாளையம்
#2798

சேதமடைந்த சாலை

சாலை

ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜர் சிலை முதல் சேத்தூர் செல்லும் சாலையில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக முகவூரிலிருந்து சேத்தூர் நோக்கி செல்லும் சாலையில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:19 AM GMT
| நாமக்கல்
#2758

விபத்தை தடுக்க சிக்னல் விளக்கு வேண்டும்

விபத்தை தடுக்க சிக்னல் விளக்கு வேண்டும்போக்குவரத்து

நாமக்கல்-திருச்சி சாலை பஸ் நிலையத்தில் இருந்து சின்னவேப்பநத்தம் வரை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாகராஜபுரம் பகுதியில் இப்பணி முடிவடைந்த நிலையில் சாலையின் நடுவே சிமெண்டு கற்களால் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.சாலையின் நடுவே தடுப்பு சுவர் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள். இதுபோன்று அவ்வப்போது சிறு,சிறு விபத்துகள் நடந்தவண்ணம் உள்ளது. இதை தடுக்க தடுப்பு சுவருக்கு முன்பு சிக்னல் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:14 AM GMT
| நாமக்கல்
#2755

வீணாகும் தண்ணீர்

தண்ணீர்

நாமக்கல் குளக்கரை திடல் அருகே உள்ள பிரதான சாலையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஒன்று உள்ளது. அந்த பள்ளத்தில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் நிரம்பியதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் தினந்தோறும் அந்த குழாயில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறுகிறது. அவை அனைத்தும் வீணாக சாலையில் ஓடுகிறது. அதை தடுக்க உடைந்த தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.-செல்வன், குளக்கரை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 10:39 AM GMT
| உதகமண்டலம்
#2745

சேறும், சகதியுமான பூங்கா

மற்றவை

ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்லம் செல்லும் சாலையில் சுற்றுலா வளர்ச்சி கழக கழகத்தின் சிறுவர் பூங்கா உள்ளது. இதன் அருகே தனியார் குழந்தைகள் விளையாட்டு, பொழுதுபோக்கு அரங்கம் இருக்கிறது. ஊட்டியில் பலத்த மழை பெய்தால் கோடப்பமந்து கழிவுநீர் பூங்கா மற்றும் அரங்கத்துக்குள் சென்று சேறும், சகதியாக மாறுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் அளித்தால் கண்டு கொள்வது இல்லை. எனவே இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 9:00 AM GMT
| பத்மனாபபுரம்
#2737

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்சாலை

குலசேகரம் அருகே உள்ள காவல்ஸ்தலம் பகுதியில் சாலையின் நடுவே வில்லுக்குறி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்-சார்லஸ். குலசேகரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 7:53 AM GMT
| குன்னூர்
#2735

பாறைகளை அப்புறப்படுத்துங்கள்...

சாலை

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் விரிவாக்கம் செய்வதற்காக அகற்றப்பட்ட ராட்சத பாறைகள் சாலையோரம் வைக்கப்பட்டு அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பாறைகள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 7:44 AM GMT
| கோபிச்செட்டிப்பாளையம்
#2733

குழியை மூடவேண்டும்

குழியை மூடவேண்டும்மற்றவை

கோபி திருமலை நகர் முதல் வீதியில் குடிநீருக்காக குழி தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் சிலாப் போட்டு மூடப்பட்டது. அதன் அருகில் பெரிய குழி தோண்டி மூடப்படாமல் உள்ளது. பகலில் குழி இருப்பது தெரியும். ஆனால் இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியாது. அதனால் வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தவறி குழிக்குள் விழுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே பேராபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குழியை மூடி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 6:25 AM GMT
| தருமபுரி
#2731

சூதாட்ட இடமாக மாறிய அங்கன்வாடி கட்டிடம்

சூதாட்ட இடமாக மாறிய அங்கன்வாடி கட்டிடம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கெட்டுஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அது முழுமையடையாமல் நான்கு ஆண்டுகளாக கட்டிட பணி பாதியில் நிற்கிறது. இந்தநிலையில் அந்த கட்டிடத்தில் சிலர் மது அருந்துவது, சூதாடுவது என கூடாரமாக மாறிவருகிறது. இதுபற்றி பல முறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் இதனை உடனடியாக பணியை தொடங்கி முடித்து அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 5:27 PM GMT
| கரூர்
#2707

சுத்தம் செய்யப்படாத இரட்டை வாய்க்கால்

மற்றவை

கரூர் ரத்தினம் சாலையில் உள்ள இரட்டை வாய்க்காலில் பிளாஸ்டிக், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரட்டை வாய்க்காலை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 4:56 PM GMT
| பட்டுக்கோட்டை
#2676

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் கைகாட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகே இருசக்கர வாகனங்கள், கார்கள் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவதியடைந்துவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 4:43 PM GMT
| கரூர்
#2664

கோரை புற்களை அகற்ற வேண்டும்

கோரை புற்களை அகற்ற வேண்டும்மற்றவை

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள வாய்க்காலில் கோரை புற்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. மேலும் இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோரை புற்கள் மற்றும் குப்பைகளை அகற்றி வாய்க்காலை தூய்மைப்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 1:59 PM GMT
| பெங்களூரு
#2609

பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகற்கள்

மற்றவை

பெங்களூரு கெங்கேரி அருகே உல்லால் மெயின் ரோட்டில் உள்ள சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்துகளை தடுக்க அந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick