Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 July 2022 1:39 PM GMT
| உதகமண்டலம்
#3241

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஊட்டிைய அடுத்த தலைகுந்தா சோதனை சாவடியில் இருந்து தலைகுந்தா மட்டம் பகுதி வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:32 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#3237

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு கூட்டமாக வலம் வரும் தெருநாய்கள் தனியாக நடந்து செல்லும் பொதுமக்களை துரத்துவதுடன் சில நேரங்களில் கடித்து விடுகிறது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் தனியாக சாலையில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:19 PM GMT
| திண்டிவனம்
#3227

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

திண்டிவனம் நேரு வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருவதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொருட்கள் வாங்க நேரு வீதிக்கு வரும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:16 PM GMT
| விழுப்புரம்
#3226

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

விழுப்புரம் சாலாமேடு செல்லும் வழியில் உள்ள வி.எஸ்.கே. நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு பணிகள் முடிந்த நிலையில் அந்த பள்ளத்தை மூடி அங்குள்ள சாலையை சீரமைக்காமல் தற்காலிகமாக மண்ணை அள்ளிப்போட்டு மூடியுள்ளனர். இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் அந்த மண்ணுக்குள் வாகனங்கள் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே அங்குள்ள சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?......

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:14 PM GMT
| கரூர்
#3223

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

கரூர் அண்ணாநகர் சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பள்ளத்தை தற்காலிகமாக மண்களை கொட்டி மூடி உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:12 PM GMT
| புதுக்கோட்டை
#3222

குண்டும், குழியுமான தார்சாலை

சாலை

புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய் அருகே விராலிமலை செல்லும் சாலையில் இருந்து செல்லுக்குடிக்கு செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தார்சாலை முழுவதும் பெயர்ந்து உள்ளதால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்கின்றனர். மேலும் குண்டும், குழியுமான இந்த சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 12:48 PM GMT
| பெரம்பலூர்
#3207

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

மற்றவை

பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரில் இருந்து பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட தலைநகரான பெரம்பலூருக்கு சென்று வருகின்றனர். காலை 8 மணிக்கு பிறகு அடுத்த பஸ் 9.45 மணிக்கு தான். இதன் காரணமாக தினமும் ஒரே பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். ஆகவே இவ்வழியில் இயங்கி வந்த கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 2 பஸ்களையும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 11:54 AM GMT
| மன்னார்குடி
#3185

குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும்

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ருக்குமணி குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு வடகரையில் சுற்றுச்சுவர் இல்லை. மேலும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சாலையின் வழியாக தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் அச்சதுடன் சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 10:36 AM GMT
| கிருஷ்ணகிரி
#3159

விபத்துக்கள் தடுக்கப்படுமா ?

சாலை

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டிலிருந்து வேப்பனப்பள்ளிக்கு பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக கிராமங்களில் நுழைவு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வேப்பனப்பள்ளி-கிருஷ்ணகிரி சாலைக்கு வரும்போது விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே வேப்பனப்பள்ளி-கிருஷ்ணகிரி சாலையில் முக்கிய இடங்களில் விபத்துக்களை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் விபத்துக்களை தவிர்க்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 7:05 PM GMT
| வேலூர்
#3155

குண்டும் குழியுமான சாலை

சாலை

வேலூர் சுண்ணாம்புரக்கார தெருவி்ல் உள்ள சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில்உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 3:06 PM GMT
| பெங்களூரு
#3079

சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்

சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்மற்றவை

பெங்களூரு ராஜ் பவன் அருகில் உள்ள சாலையில் பாதசாரிகள் சாலையை கடக்க வசதியாக சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் பிரதான சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சுரங்க நடைபாதையை அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் கனமழையால், அந்த சுரங்க நடைபாதைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அதை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 3:05 PM GMT
| பெங்களூரு
#3078

பராமரிப்பு இன்றி கிடக்கும் சுரங்கச்சாலை

மற்றவை

பெங்களூரு லிங்கராஜாபுரம் பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்கப்பாதை லிங்கராஜாபுரம் மற்றும் பிரேசர் டவுன் பகுதியை இணைக்கிறது. இதனால் அந்த சுரங்கப்பாதையை வாகன ஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த சுரங்கப்பாதை கட்டிய நாள் முதல் இன்று வரை பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் சிதிலமடைந்துள்ளது. அதன் சுவரிகளில் செடிகள் வளர்ந்துள்ளது. எனவே அந்த சுரங்கப்பாதையை அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick