Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2022 11:53 AM GMT
| அரக்கோணம்
#4107

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கைனூர், ரத்தன்சந்த் நகர், அசோக் நகர், பாக்கியம்மாள் காலனி, எப்.சி.ஐ.காலனி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி அதில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து எழக்கூடிய நிலை உள்ளது. இந்த சாலையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 11:21 AM GMT
| ஆரணி
#4103

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி -சந்தவாசல் நெடுஞ்சாலையில் முள்ளிப்பட்டு கூட்ரோட்டில் அர்ஜுனன் குளம் உள்ளது. இந்த குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப்பணி கிடப்பில் போடப்பட்டது. சாலை ஓரத்தில் உள்ள இந்த குளத்தை சுற்றிலும் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் அந்தவழியாக வரக்கூடிய வாகன ஓட்டிகள் தவறி குளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை சீரமைத்து, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 11:20 AM GMT
| சேலம்
#4095

திறக்கப்படாத சுகாதார வளாகம்

திறக்கப்படாத சுகாதார வளாகம்மற்றவை

சேலம் மாநகராட்சி மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்களுக்கான பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் ஆண்டுகள் பல கடந்து அந்த பொதுக்கழிப்பிடம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 11:04 AM GMT
| வாணியம்பாடி
#4094

செடிகளை அகற்ற வேண்டும்

செடிகளை அகற்ற வேண்டும்மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓம்சக்தி கோவில் பகுதியில் செல்லும் மின்கம்பியில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்கம்பிகள் சேதம் அடைந்து அறுந்துவிழும் நிலை உள்ளது. விபத்தை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்கம்பியில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 10:53 AM GMT
| திருப்பத்தூர்
#4092

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் வள்ளலார் நகரில் ஐ.டி.ஐ. எதிரில் வாணியம்பாடி மெயின் ரோட்டில் சுமார் 20 கடைகள் முன்பு கழிவுநீர் ஒரு மாதமாக தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது. துர்நாற்றமும் வீசுகின்றது. எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.-கே.பிரபு, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 10:49 AM GMT
| நாகர்கோவில்
#4091

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டிதண்ணீர்

நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் அருகில் ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் குடிநீர் நிரப்பப்படாமல் காட்சிப் பொருளாக காணப்படுகிறது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். -நடராஜன், வடிவீஸ்வரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 10:14 AM GMT
| ஜோலார்பேட்டை
#4081

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவேண்டும்

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா ரெயில்வே தரைப் பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இதனால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 10:19 AM GMT
| ஆரணி
#4079

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கண்ணகி நகரில் உள்ள கல்வாய்கள் தூர்வாரப்படாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன் அருகிலேயே சிறுமின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு தண்ணீர் பிடிக்கவரும் பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.-சந்திரசேகரன், முள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 9:45 AM GMT
| போளூர்
#4075

தெருவிளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் கீழ்பட்டு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெரு, மேட்டுத்தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து ஊராட்சியில் புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 9:22 AM GMT
| ஆம்பூர்
#4073

தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

சாலை

ஆம்பூர் தாலுக்கா பெரியாங்குப்பம் கிராமத்தில் இருந்து அய்யா கோவில் TAW டேனரி வழி சாலை சோலூர் எல்லைக்குட்பட்டது .இந்த வழியில் பெரியாங்குப்பம் ,நார்ச்சர்குப்பம்,,காமனுர்த்தட்டு பகுதி மக்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் ஆம்பூருக்கு சென்று வருகின்றனர் .இந்த சாலை தார் சாலை அனைத்தும் கனரக வாகனங்கள் சென்று முழுவதும் நாசமாகி விட்டது .போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்வதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார்சாலை தரமாக அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா ? ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 9:18 AM GMT
| கலசப்பாக்கம்
#4071

கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும்

கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும்மற்றவை

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்தப்பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் போதுமான இட வசதி இல்லாததால், மாணவ- மாணவிகள் அருகில் உள்ள கோவில் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ- மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 6:00 PM GMT
| கடலூர்
#4052

சாலை சீரமமைக்கப்படுமா?

சாலை சீரமமைக்கப்படுமா?சாலை

கடலூர் வில்வராயநத்தம் ஆனந்தா நகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள ஜல்லியில் பெயர்ந்து கூர்மையாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வானங்கள் அடிக்கடி பழுதாகிறது. இதனால் விபத்தும் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே இந்த சேதமடைந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick