Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2022 1:41 PM GMT
| இராணிப்பேட்டை
#4158

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர் பாலமுருகன் தெருவில் சாலை, கழிவுநீர் கால்வாய் போன்று எந்த ஒரு வசதியும் செய்யப்படாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இனியாவது சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:30 PM GMT
| இராணிப்பேட்டை
#4152

அடிபம்பு சீரமைக்கப்படுமா?

அடிபம்பு சீரமைக்கப்படுமா?தண்ணீர்

சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தில் எத்திராஜ் ரெட்டித்தெருவில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக அடிபம்பு அமைத்து சில மாதங்கள் மட்டுமே பயன்பட்டு வந்தது. தற்போது பழுதாகி பல ஆண்டுகளாக பயன்படாமல் உள்ளது. இதனை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:21 PM GMT
| இராணிப்பேட்டை
#4148

கூடுதல் கட்டணம் வசூல்

மற்றவை

ராணிப்பேட்டை வாரச்சந்தையில், விவசாயிகள் விற்பதற்காக கொண்டுவரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பில்களும் தரப்படுவதில்லை. அரசு நிர்ணயத்துள்ள குத்தகையின் கட்டண விவரங்கள் அனைவருக்கும் தெரியுமாறு சந்தையின் முகப்பில் எழுதி வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:13 PM GMT
| குடியாத்தம்
#4145

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம் லத்தேரி ஊராட்சியில் உள்ள உடையார் தெருவில் பல ஆண்டுகளாக சாலை வசதியே செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்க சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:07 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#4143

ஒளிராத மின்விளக்குகள்

மின்சாரம்

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளில் ஏராளமான விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிர்வதில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 12:38 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#4125

தினத்தந்தி செய்தி எதிரொலியால் குப்பை அகற்றம்

தினத்தந்தி செய்தி எதிரொலியால் குப்பை அகற்றம்குப்பை

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதை பூங்காவில் பொதுமக்கள் அமரும் இருக்கை அருகே பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடந்தன. இதனால் அங்கு நடை பயிற்சி செல்வோர் மற்றும் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுப்போர் அவதிக்குள்ளாகினர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

*தினத்தந்தி புகார்பட்டி செய்தி எதிரொலி;

குப்பைகள் அகற்றம்

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதை பூங்காவில் பொதுமக்கள் அமரும் இருக்கை அருகே பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடந்தன. இதனால் அங்கு நடை பயிற்சி செல்வோர் மற்றும் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுப்போர் அவதிக்குள்ளாகினர். இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை அடுத்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு கடந்த குப்பைகளை அகற்றினர். இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி.

சத்யா, புலியகுளம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 12:27 PM GMT
| வேலூர்
#4120

உடைந்த சிமெண்டு சிலாப் சரிசெய்யப்படுமா?

உடைந்த சிமெண்டு சிலாப் சரிசெய்யப்படுமா?கழிவுநீர்

வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மேல்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் நுழைவு வாயில் அருகே உள்ள சிமெண்டு சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்தவழியாக செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிமெண்டு சிலாப் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 12:22 PM GMT
| கோயம்புத்தூர் வடக்கு
#4117

குப்பைகள் தீவைத்து எரிப்பு

குப்பைகள் தீவைத்து எரிப்புகுப்பை

கோவை சங்கனூர் ரோட்டில் கால்வாய் ஓரங்களில் ஏராளமான குப்பைகள் குவித்து வைக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி இருக்கிறது இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதால் கடும் அவதி அடைகின்றனர் எனவே இந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முறையாக அகற்றுவதுடன், அதனை தீ வைத்து எரிப்பவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 12:17 PM GMT
| திருவண்ணாமலை
#4116

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?மற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பறையம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ளவர்கள் கால்நடைகளை பள்ளி வளாகத்தில் கட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 12:04 PM GMT
| இலால்குடி
#4111

குறுகிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

திருச்சி மாவட்டம், லால்குடி மெயின்ரோடு வாளாடி ரெயில்வே மேம்பாலம் மிகவும் குண்டும், குழியுமாகவும், குறுகிய சாலையாகவும் உள்ளது. இதனால் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தும், செப்பணிட்டும் பாதுகாப்பான வாகனப்பயணம் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 12:01 PM GMT
| கிருஷ்ணராயபுரம்
#4110

குப்பை தொட்டி வைக்க வேண்டும்

குப்பை

கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 11:59 AM GMT
| கரூர்
#4109

குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

குப்பை

கரூர் சின்னாண்டாங்கோவில் அமராவதி ஆற்றுப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொட்டப்பட்டு குப்பைகளாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இவற்றில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி, தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick