Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 5:52 PM GMT
| கடலூர்
#4046

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரி அருகே உள்ள பூதங்குடி பகுதியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் அனுப்பும் இடத்தில் உள்ள ஏரி பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. ஆகவே இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:44 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#4042

போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்து

திருச்சி பாரதியார் சாலையில் இருந்து பேர்ட்ஸ் ரோடு செல்லும் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்துவதனால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையின் அருகே பள்ளிகள் உள்ளதால் மாணவ-மாணவிகளுக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 5:43 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#4040

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

திருச்சி மாநகராட்சி சவேரியார் கோவில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாருவதுடன் மாலை நேரத்தில் கொசு மருந்துகள் அடித்து இப்பகுதியில் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:45 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#3989

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருச்சி மாநகராட்சி செல்வநகர் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி வாகனங்கள் பழுதடைந்து விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 3:35 PM GMT
| ஜெயங்கொண்டம்
#3984

ஏரிகளில் மண் எடுப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்

மற்றவை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரிகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகளுக்கு அந்த அவகாசம் போதாததால் இப்பகுதியில் உள்ள நிறைய விவசாயிகள் ஏரிகளில் இருந்து மண்ணை விவசாய நிலங்களுக்கு எடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கி விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு ஏரிகளில் இருந்து மண்ணை எடுப்பதற்கு கால அவகாசம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 2:59 PM GMT
| பெரம்பலூர்
#3974

இடையூறாக உள்ள நுழைவு வாயிற் தூண்

மற்றவை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வரும் வழியில் நுழைவு வாயிற் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. அதில் நடுவில் உள்ள தூண் பஸ்கள் உள்ளே செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த தூணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 2:57 PM GMT
| பெரம்பலூர்
#3972

ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

மற்றவை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையில் உள்ள கோனேரி ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுவததோடு, தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிலத்தடி நீரும் மாசடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட கோனேரி ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 2:36 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#3946

பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?மற்றவை

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள சிந்தாமணி வெனீஸ் தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையாமல் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 2:00 PM GMT
| பெரம்பலூர்
#3926

தெருவிளக்குகள் இல்லாததால் மக்கள் அச்சம்

மின்சாரம்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கம்மாள் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள் ரங்கம்மாள் நகர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 1:58 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#3925

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

கோவை புலியகுளம் கருப்புராயன் கோவில் வீதியில் பொது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டு இருக்கிறது. 2 வார காலம் ஆகியும் இதை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. இது குறித்து தகவல் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 1:54 PM GMT
| உதகமண்டலம்
#3923

விபத்து அபாயம்

சாலை

ஊட்டியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் உள்ள இத்தலார் பகுதியில் சாலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலைகளில் உள்ள குழிகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 1:51 PM GMT
| குன்னூர்
#3919

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது

போக்குவரத்து

கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறையால் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள பள்ளி, குடியிருப்புகள், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்தை நிறுத்தாமல் பணிகளை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick