Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 July 2022 3:56 PM GMT
| பெங்களூரு
#4883

குறுகலான சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

குறுகலான சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்போக்குவரத்து

பெங்களூரு சிக்பேட்டை, மாமுல்பேட்டை கிராஸ் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. அந்த சாலையில் பலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி உள்ளனர். இதனால் பாதசாரிகள் அந்த சாலை வழியாக செல்ல சிரமம் அடைகின்றனர். மேலும், அந்த சாலைகளில் பலபகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:56 PM GMT
| பெங்களூரு
#4882

நடைபாதையில் கிடக்கும் கட்டுமான பொருட்கள்

நடைபாதையில் கிடக்கும் கட்டுமான பொருட்கள்மற்றவை

பெங்களூருவில் பழைய விமான நிலையம் சாலையில் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நடைபாதையில் கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் சாலையில் இறங்கி செல்லும்போது விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால் சாலையில் கிடக்கும் கட்டுமான பொருட்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:56 PM GMT
| பெங்களூரு
#4881

சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்சாலை

பெங்களூரு காந்தி நகர், யாதவா கல்லூரி சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அந்த பணிகள் தொடங்கி பல நாட்கள் ஆகியும் வேலை முடிந்தபாடில்லை. இதனால் அந்த சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். சிலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:56 PM GMT
| பெங்களூரு
#4880

பஸ் நிறுத்தம் முன்பு சாலை பள்ளம்

மற்றவை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பஸ் நிறுத்தம் முன்பு உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் இறங்கி, ஏறும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:43 PM GMT
| பெரம்பலூர்
#4879

புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் வளைவு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள், ஆம்புலன்சுகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:32 PM GMT
| கரூர்
#4872

மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்

மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்கழிவுநீர்

கரூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாதி உடைந்த நிலையில் நீண்ட நாட்களாகவே மூடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 1:12 PM GMT
| உதகமண்டலம்
#4809

கடும் துர்நாற்றம்

கடும் துர்நாற்றம்குப்பை

பழைய ஊட்டியில் நகராட்சி பள்ளி அருகே நடைபாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் பள்ளி மாணவ-மாணவிகள் மூக்கை பொத்திக்கொண்டு அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். எனவே அந்த இடத்தில் குப்பை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பை கொட்டுவதற்கு அந்த பகுதியில் தொட்டி வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 1:11 PM GMT
| உதகமண்டலம்
#4808

சாக்கடையில் அடைப்பு

சாக்கடையில் அடைப்புகழிவுநீர்

ஊட்டி என்.சி.எம்.எஸ். வளாகத்தில் இருந்து தாவரவியல் பூங்கா செல்லும் வழியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 1:09 PM GMT
| அரவக்குறிச்சி
#4807

குண்டும், குழியுமான தார்சாலை

குண்டும், குழியுமான தார்சாலைசாலை

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், வடுகப்பட்டி, புங்கோடை காளிபாளையம் பகுதி பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காகவும், இப்பகுதி விவசாயிகள் வேளாண் விளை பொருட்களையும், இடு பொருட்களையும் எளிதாக வாகனங்களில் எடுத்து செல்லும் வகையிலும் ஓலப்பாளையத்தில் இருந்து நொய்யல் மெயின் ரோட்டில் உள்ள சேமங்கி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 1:02 PM GMT
| கலசப்பாக்கம்
#4804

ரேஷன் கடை கட்டிடம் பழுது

மற்றவை

கலசபாக்கம் ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. அந்தக் கட்டிடம் பழுதடைந்துள்ளன. மழைக் காலத்தில் மழைநீர் கடை உள்ளே கசிந்து சொட்டுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வீணாகிறது. ரேஷன் கடைக்கு புதிய கட்ட வேண்டும். இல்லையேல், வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.-குமரன், லாடவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:47 PM GMT
| திருவரங்கம்
#4801

நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

மற்றவை

திருச்சி மாவட்டம், அரியாவூர் ஒத்தக்கடை பஸ் நிறுத்தம் அருகே தாதன் குட்டை உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குட்டை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த குட்டையில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த குட்டையை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:43 PM GMT
| அரவக்குறிச்சி
#4799

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலை குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் உள்ள பகுதியில் மின் கம்பம் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick