19 Feb 2023 9:27 AM GMT
#27456
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
கவுண்டம்பாலையம்
தெரிவித்தவர்: Naveen
கோவை சிவானந்த காலனியில் இருந்து கவுண்டம்பாளையம், துடியலூர் வழியாக சரவணம்பட்டிக்கு 111 ஏ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பஸ்சை நம்பி இருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் வேறு பஸ்சில் துடியலூர் சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.