10 July 2022 11:17 AM GMT
#1129
அரசு பஸ் சேவை
துடியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
துடியலூரில் இருந்து ஈச்சனாரி வழியாக வடகோவைக்கு ஏ4 என்ற சாதாரண கட்டண அரசு பஸ் மற்றும் பிரீமியர் நகர் முதல் கோவில்மேடு வரை 12 பி என்ற சாதாரண கட்டண அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பஸ்களால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து வந்தனர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அந்த 2 அரசு பஸ் சேவையும் நிறுத்தப்பட்டதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் குறித்த நேரத்தில் வேறு பஸ் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.