4 Aug 2024 10:55 AM GMT
#48743
சுகாதாரக்கேடு
திருச்செந்தூர்
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவில் கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் வழியில் தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், அந்த வழியாக செல்கிறவர்கள் ஆபத்தான குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றி, குழியை மூடி சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.