21 April 2024 10:58 AM GMT
#46063
கால்வாய் தூர்வாரப்படுமா?
திருச்செந்தூர்
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் மாசடைந்து காணப்படுகிறது. திருச்செந்தூர் தோப்பூரில் இருந்து ஜீவாநகர் வரையிலும் கால்வாய் முழுவதும் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே கால்வாயை தூர்வாரி முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.