3 Dec 2023 4:48 PM GMT
#42639
கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?
தர்மபுரி
தெரிவித்தவர்: Sivashanmugam
தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு சாலையின் பக்கவாட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் சில இடங்களில் செடிகள் வளர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?