3 Dec 2023 12:44 PM GMT
#42561
கழிவுநீர் கால்வாய் வேண்டும்
பூந்தமல்லி
தெரிவித்தவர்: ரவிகிருஷ்ணன்
சென்னை பூந்தமல்லி, கரையான் சாவடி வைதீஸ்வரர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அந்த பகுதியில் கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.