Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Aug 2022 10:54 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#10574

ஆபத்தான குழி

மற்றவை

திருப்பூர் ஸ்டேட் பாங்க் காலனி 3-வது வீதியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. குழாய் சீரமைத்த பின்னரும் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த குழியை உடனே மூட வேண்டும். மேலும் குழாய் பதிக்க தோண்டப்படும் குழிகளை தாமதமின்றி மூட உரியநடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 10:48 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#10571

தெருவிளக்கு ஒளிருமா?

மின்சாரம்

திருப்பூர் தென்னம்பாளையம் டி.எம்.சி. காலனியில் காளமேக தெருவில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வீடுகளில் இருந்து வெளியே வரவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். அது மட்டுமல்ல நாய்கள் நடுரோட்டில் படுத்து கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவது இல்லை. அவர்கள் வாகனத்தை நாய்கள் மீது ஏற்றும்போது வாகனத்துடன் கீேழ விழுந்து விடுகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெரு விளக்கை ஒளிர செய்ய நடவக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 10:45 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#10570

நிறம் மாறிய நொய்யல்

மற்றவை

திருப்பூர் மாநகர் நடுவே நொய்யல் ஆறு செல்கிறது. நகரின் நடுவே ஆறு செல்வது நகருக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆனால் அந்த ஆற்றை பயன்படுத்தும் விதம்தான் கவலை அளிக்கிறது. நொய்யல் ஆற்றை சீரமைக்க அரசு அதிகம் செலவு செய்கிறது. ஆனாலும் அவற்றில் கலக்கும் கழிவுநீர், சாயக்கழிவுநீர், அசுத்தமான குப்பை, வீடுகளின் கழிவுகள், ஆலைகளின் கழிவுகள் என தினம் தினம் கலந்து ஆற்றின் நிறமே மாறி விட்டது. ஒரு காலத்தில் நொய்யல் ஆற்றில் மீன் பிடித்து சமைத்து உண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று ஆற்றில் கால் வைக்கவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#10348

குழியை உடனே மூட வேண்டும்

குழியை உடனே மூட வேண்டும்போக்குவரத்து

திருப்பூர் 17-வது வார்டு டி.என்.கே. புரம் பிரதான சாலை நால்ரோட்டில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது. இதையடுத்து குழாயை சரி செய்ய சாலையில் குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாய் சரி செய்த பின்னரும் குழியை மூடவில்லை. இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். குழியை மூடாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே குழிைய உடனே மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:09 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9923

வீணாகும் தானியங்கள்

மற்றவை

தமிழக மக்களுக்கு தமிழக அரசு ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கி வருகிறது. குறிப்பாக கோதுமை வட மாநிலங்களில் இருந்து கூட்ஸ் ரெயில் மூலம் திருப்பூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் ரெயிவே கூட்ஷெட்டில் இருந்து லாரியில் ஏற்றப்படும் கோதுமை சிந்தி வீணாகிறது. மேலும் கிழிந்து கோணிப்பை என்பதால் அந்த லாரி செல்லும் பகுதியில் சாலை எங்கும் கோதுமை சிந்தி வீணாகிறது. பல ஆயிரம் கோடி செலவு செய்து, இப்படி வீணாக சாலையில் கோதுமை சிந்துவது கவலை அளிக்கிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:07 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9922

ஆபத்தான பள்ளம்

சாலை

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இதற்கான சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ளது. குழாய் பதிக்க சாலையை தோண்டுவது தவிர்க்க முடியாதது. ஆனால் தோண்டிய பிறகு குழாய் பதிக்க தாமதம் ஆனால் இரவு நேரத்தில் பிரதிபலிப்பான் அமைத்து வாகன ஓட்டிகளின் உயிரை காக்கலாமே. பகல் நேரத்தில் அந்த குழியை சுற்றி, சிவப்பு நிற ரிப்பனை கட்டினால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் செல்லும் போது எச்சரிக்கையுடனுடம், கவனமுடனும் செல்வார்கள் அல்லவா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:06 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9921

கொசுமருந்து தெளிக்க வேண்டும்

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி ஊத்துக்குளி சாலை மண்ணரை, சத்யாகாலனி, செல்வபுரம் விரிவு, சக்திநகர் ஆகிய பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. இந்த பகுதியில் இதுவரை கொசு மருந்து தெளிக்கப்படவில்லை. இதனால் மாலை நேரங்களில் கொசுக்களின் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்கு படை எடுக்கின்றன. இரவு நேரங்களிலும் கொசுக்கடி தாங்க முடியவில்லை. எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு கொசு மருந்து தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:04 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#9920

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பலத்த காற்று வீசும்போது குப்பை சாலைகளில் சிதறிக்கிடக்கிறது. இவற்றை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9739

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:49 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#9737

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகுப்பை

காங்கயம், வீரணம்பாளையம் பிரிவு அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் சுற்றுச் சூழல் பாதிப்படையும் சூழலும் உருவாகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, இதுபோல் குப்பைகளை கொட்டாமல் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:47 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#9736

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

நாய்கள்  தொல்லை  அதிகரிப்புமற்றவை

வெள்ளக்கோயில் பகுதியில் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாய்கள் தோட்டத்தில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று விட்டன.தெரு நாய்கள் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 12:55 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#9536

சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?திருப்பூர் கள்ளம்பாளையம் ெரயில்வே லைனில் உள்ள மின்கம்பம் கொடிபடர்ந்து காணப்படுகிறது. அதை மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதற்கு அடுத்தாற் போல் உள்ள ஒரு மின்கம்பம் நடுவில் உடைந்து சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து உடைந்து வேறு ஏதும் அசம்பாவிதம் நடைபெறும் முன் உடைந்து சேதமான கம்பத்தை அதிகாரிகள் மாற்றுவார்களா என்று அப்பகுதி மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். முருகன், ராயபுரம். 95009 94261

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick