20 Sep 2022 11:58 AM GMT
#16103
பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
காங்கயம், கரூர் சாலை தண்ணீர்பந்தல் பஸ் நிறுத்தத்தில் இருந்து பகவதி பாளையம் செல்லும் சாலை கடந்த சுமார் 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்தநிலையில் தற்போது சாலையின் பல இடங்களில் தார் மெட்டல் முழுவதுமாக பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இந்த சாலையின் வழியாக பள்ளி வாகனங்கள், பனியன் கம்பெனி வாகனங்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன.
சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்,குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை நேரில் ஆய்வு செய்து சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்ராஜூ,காங்கயம்.
9865180257