Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Jan 2023 10:09 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24637

நொய்யல் ஆறு தூர்வாரப்படுமா?

மற்றவை

திருப்பூர் மாநகரில் பாயும் நொய்யல் ஆற்றில் செடி, கொடிகள் புதர்மண்டி கிடக்கின்றன. பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதால் ஆற்றுநீர் ேமலும் மாசடைந்துள்ளது. நடராஜன் தியேட்டர் அருகில் மற்றும் ராயபுரம் பகுதிகளில் தூர்வாரப்படவில்லை. அனைத்திலும் வெளிநாட்டு மோகம் கொண்ட நமக்கு அதை ஆற்றை பாராமரிப்பதில் காட்டுவதில் தயக்கம் சுயநலம்தானோ?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 10:07 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#24636

சாய்ந்த நிலையில் சிக்னல் கம்பம்

மற்றவை

திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லூர் போலீஸ் நிலையம் எதிரில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பத்தில் வாகனம் மோதியுள்ளது. அதில் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விபத்து ஏற்படாமல் இருக்க சிக்னல் கம்பத்தினை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 10:06 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24635

24 மணிநேரமும் ஒளிரும் தெருவிளக்கு

மற்றவை

திருப்பூர் கே.வி.ஆர்.நகர், 6-வது வீதி 3-வது குறுக்கு தெரு பேக்கரி அருகே உள்ள மின்கம்பத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மின்கம்பத்தில் 24 மணிநேரமும் தெரு விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இதனை மின்வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இரவு நேரங்களில் மட்டும் தெருவிளக்கு எரிய மின் ஊழியர்களுக்கு மின்சாரத்தை சேமிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jan 2023 10:04 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#24634

சாலைேயாரம் கொட்டப்பட்டுள்ள குப்பை

குப்பை

குன்னத்தூர் அருகே கம்மாள குட்டை ஊராட்சி தொரவலூர் ரோடு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சாலையோரம் குப்பை குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடுஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-----------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 9:44 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#24418

பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

மின்சாரம்

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விருகல்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விருகல்பட்டியில் மயானத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்களில் பகலிலும் மின்விளக்குகள் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே பகல் நேரத்தில் மின் விளக்குகள் எரியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 9:42 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#24416

சாய்ந்த நிலையில் உயரழுத்த மின் கம்பம்

மற்றவை

குன்னத்தூர் பவர் ஹவுஸில் இருந்து குறிச்சி புதூர் தனியார் நூற்பாலைக்கு தனியாக உயர் அழுத்த மின் இணைப்பு செல்கிறது. இதில் ஒரு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் கட்டிடத்தில் விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.-------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 9:39 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#24414

தேங்கிநிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட நொச்சிப்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீட்டுக்கு மற்றும் கடையிலிருந்து வெளியேறக்கூடிய கழிவுகள் மூலக்கடை அருகில் தேக்கமடைகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு தோற்று நோய் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. விரைவாக மாநகராட்சி நிர்வாகம் தேக்கமடைந்து வரும் சாக்கடை கழிவுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி சென்ற போது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 9:37 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24413

புண்ணாகிப்போன புதுசாலை

சாலை

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து கோயில் வழி செல்லும் சாலை சில மாதங்களுக்கு முன்பு சீரமைத்தனர். இந்த நிலையில் மீண்டும் குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டதால்வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைவாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியை நிறைவு செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்--------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 9:36 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#24411

நாளுக்கு நாள் பெருகும் நாய்கள் எண்ணிக்கை

மற்றவை

திருப்பூர் மாநகரில் திரும்பும் தெருக்களில் எல்லாம் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரம் தனியாக சென்றால் நாய்களிடம் இருந்து தப்பித்து வீடு செல்வது கடினம். அந்த அளவுக்கு நாய்கள் தொந்தரவு அதிகரித் துவிட்டது. திருப்பூர் பழைய கோர்ட்டு சாலையில் போலீஸ் குடியிருப்பு நுழைவு வாயிலில் கோர்ட்டு கேட் அருகே 25 நாய்கள் படுத்து கிடக்கிறது. இந்த நாய்களால் அந்த சாலை வழியாக செல்வோர் படும் துயரத்துக்கு அளவே இல்லை. எனவே அங்கு உள்ள நாய்களை பிடித்து அப்புற படுத்த வேண்டும்.-------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 10:48 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#24205

மயானம் செல்லும் வழியில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

மற்றவை

குன்னத்தூர் குளத்து பகுதியில் 2 ஏக்கர் அளவிற்கு மயானத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மயானத்திற்கு செல்லும் இடத்தில் மின் விளக்குகள் மற்றும் சுகாதார வளாகம், ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மர்மநபர்கள் கோழி கழிவுகளை மயானம் செல்லும் சாலையில் வீசி சென்று விடுகிறார்கள். இதனால் அந்த சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 10:46 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#24203

கிணற்றில் கொட்டப்படும் குப்பை

குப்பை

பல்லடம் நகராட்சி பச்சாபாளையம் பகுதியில் விநாயகர் கோவில் அருகே கிணறு உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர். தற்போது பொதுமக்கள் கிணற்றை பயன்படுத்தவில்லை. இதையடுத்து கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றி அந்த கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 10:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#24202

பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்கா

மற்றவை

குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பூங்கா வளாகம் முற்றிலும் புதர் மண்டி பாம்புகள் வாழும் இடமாக மாறிவிட்டது. இதனால பூங்காவை பேரூராட்சி அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளார்கள். ஆகவே சிறுவர் பூங்காவை பொதுமக்கள் மற்றும் சிறுவர்,சிறுமியர் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.-----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick