Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2024 12:39 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#48253

போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து

கவுண்டம்பாளையம் தடாகம் சாலையோரத்தில் டி.வி.எஸ். நகரில் பஸ் நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறை பணிக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு கற்கள் மொத்தமாக வைக்கப்பட்டு உள்ளன. இவை வைக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் அந்த கற்கள் வீணாகும் நிலை உள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே அந்த கற்களை பயன்படுத்தவோ அல்லது அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 12:23 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#48249

கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு நேரு நகர் பொது கழிப்பிடத்தின் பின்புறம் 2-வது தெரு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி காணப்படுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை உடனடியாக நீக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 12:22 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#48248

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கோவை புலியகுளத்தில் இருந்து சுங்கம் செல்லும் சாலையில் அந்தோணியார் கோவில் பிரிவில் மின்மாற்றியின் கீழ் பகுதியில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் தினமும் குடிநீர் வீணாக செல்கிறது. இது காண்போரை கவலை கொள்ள செய்கிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள கசிவை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 12:20 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#48247

கால்வாய்க்கு மூடி வேண்டும்

மற்றவை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு மேல் மூடி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கால் தவறி கால்வாயில் விழும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த கால்வாய்க்கு மேல் மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 12:19 PM GMT
Mr.V.Ramachandran | வால்பாறை
#48246

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

மற்றவை

வால்பாறை அருகே செலாளிப்பாறை எஸ்டேட் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தை ஒட்டி நுழைவு வாயிலுக்கு அருகில் ராட்சத யூகலிப்டஸ் மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் நிற்கிறது. சூறாவளி காற்று வீசும்போது அந்த மரம் சாய்ந்து விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 12:23 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#48045

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு, சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சாைலகளில் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்பவர்களை துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 12:00 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#48042

மாசுபடும் கிணற்று நீர்

தண்ணீர்

பந்தலூர் அருகே மலப்பொட்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்கு மேல் மூடி இல்லை. இதனால் காற்றில் பறந்து வரும் குப்பைகள் கிணற்றுக்குள் விழுகின்றன. இதன் காரணமாக கிணற்று நீர் மாசுபடுகிறது. இதை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கிணற்றுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 12:00 PM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#48041

விழுந்து கிடக்கும் மரம் அகற்றப்படுமா?

மற்றவை

பேரூர் பச்சாபாளையம் பிரிவு ஆவின் பால் பண்ணை அருகே பழமையான வேப்ப மரம் இருந்தது. சாலையோரம் இருந்த அந்த வேப்ப மரம் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தது. இது சாைலயை ஒட்டி விழுந்து கிடக்கிறது. நீண்ட நாட்கள் ஆகியும் அந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன்வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 11:59 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#48040

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் தாலுகா மழவன்சேரம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதுவும் மழை பெய்து விட்டால் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 11:58 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#48038

குடிநீர் குழாயில் உடைப்பு

தண்ணீர்

கோவை பாலசுந்தரம் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து வ.உ.சி. பூங்கா பகுதிக்கு பிரிந்து செல்லும் இணைப்பு சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. அத்துடன் சாலை சேதம் அடைந்து வருகிறது. எனவே அந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 11:52 AM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#47872

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவையை அடுத்த பட்டணம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. அப்போது அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 11:51 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#47871

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவைப்புதூரில் இருந்து உக்கடம் செல்லும் வழியில் உள்ள புட்டுவிக்கி சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அங்கு சில இடங்களில் ஆபத்தான பள்ளங்களும் ஏற்பட்டு உள்ளதால், வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick