Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Jun 2024 11:50 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#47870

சுகாதார சீர்கேடு

குப்பை

மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் மருதமலை பஸ் நிலையத்தில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதாரமற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 11:50 AM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#47869

விபத்து அபாயம்

சாலை

நெகமத்தில் இருந்து என்.சந்திராபுரம் செல்லும் வழியில் அய்யம்பாளையம் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையோரத்தில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கனகர வாகனங்களுக்கு வழிவிடும்போது பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையோரம் உள்ள பள்ளங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 12:30 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#47726

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கோவை மாநகராட்சி 73-வது வார்டுக்கு உட்பட்ட கீதா ஹால் சாலையில் சிறுவாணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்டு உள்ள குழாய் உடைந்து காணப்படுகிறது. அதில் இருந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை சீரமைப்பு பணியை மேற்கொள்ள முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இனிமேலாவது குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 12:30 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#47725

கிணற்றில் மூடி இல்லை

மற்றவை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலப்பொட்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக குடிநீர் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கிணற்றில் மூடி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக குப்பைகள் கிணற்றில் விழுந்து குடிநீர் மாசுபட்டு வருகிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 12:29 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#47724

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

கோவை கணபதி மணியகாரன்பாளையத்ைத அடுத்த உடையாம்பாளையத்தில் கந்தசாமி நகர் உள்ளது. இங்கு மாநகராட்சி சார்பில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பல தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்குகளை பழுது நீக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 12:28 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#47722

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

கோவையை அடுத்த பாப்பம்பட்டியில் பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் கிருஷ்ணா கார்டன் அருகே மரக்கடை பிரிவில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதால், விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 12:07 PM GMT
Mr.V.Ramachandran | உதகமண்டலம்
#47499

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

பந்தலூர் விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்யும் சமயங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் கால்வாய் தூர்வாரப்பட வில்லை. ஆகவே, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 12:06 PM GMT
Mr.V.Ramachandran | உதகமண்டலம்
#47498

பழுதடைந்த சாலை

சாலை

பந்தலூர் அருகே செம்பக்கொல்லியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலைகளில் உள்ள குழிகளில் விடாமல் இருக்க ஒதுங்கி செல்லும் போது, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் நிலை காணப்படுகிறது. எனவே, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 3:11 PM GMT
Mr.V.Ramachandran | குன்னூர்
#47371

விபத்து அபாயம்

சாலை

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து சக்திமலை கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால், அந்த குழி நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஆகவே, குழியை மூடி சாலையை புதுப்பிக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 3:10 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#47370

தேங்கும் மழைநீர்

தண்ணீர்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள சோலாடி பகுதியில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவ்ககை எடுக்கவில்லை. இதன் காரணமாக மழை பெய்யும்போது, வெள்ளம் பெருக்கெடுத்து ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் கொசு உற்பத்தியும் அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 3:05 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#47367

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் அருகே ஏலமன்னா எழுபது செட் முதல் எளியாஸ் கடை பகுதி வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் குழிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 3:05 PM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#47364

குண்டும், குழியுமான சாலை

சாலை

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் ஊத்துக்குளிக்கு செல்லும் சுமார் 2.9 மீட்டர் தூரமுள்ள இணைப்பு சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மழை பெய்துவிட்டால், அந்த சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick