Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jun 2025 7:49 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#56645

சாக்கடையில் அடைப்பு

கழிவுநீர்

கோவை நீலிக்கோணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் புதர் செடிகளும் வளர்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த கால்வாயை தூர்வார இனிமேலாவது அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 7:34 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#56644

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

பந்தலூர் அருகே பாதிரிமூலாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஆனால் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளும் பழுதாகி கிடக்கின்றன. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 10:47 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#56495

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

கோவை சீரநாயக்கன்பாளையம் டேங்பெட் லைன் வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சாலையோரத்தில் சுமார் 4 அடிக்கு குழி ேதாண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணியை முடித்து குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து குழியை மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 10:46 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#56494

சாலையில் குழி

சாலை

கோவை மாநகராட்சி 92-வது வார்டு சுகுணாபுரம் செந்தமிழ் நகர் விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் மீது சிறிய பாலம் அமைத்து சாலை போடப்பட்டு உள்ளது. இங்கு கால்வாயை தூர்வார சிறிய குழி அமைத்து சிமெண்டு மூடி போட்டு உள்ளனர். மூடி அமைந்துள்ள பகுதியில் சாலை உடைந்து மற்ெறாரு குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். குறிப்பாக இரவில் விபத்துகள் அதிகம் நடக்கிறது. எனவே அந்த குழியை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 10:46 AM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#56493

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதியில் ஓரிடத்தில் கால்வாய் பணிக்காக குழி தோண்டப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது. அத்துடன் சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் நடைபெறுகிறது. போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பது இல்லை. எனவே அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 10:45 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#56492

முட்புதர்கள் அகற்றப்படுமா?

சாலை

பந்தலூர் அருகே கோட்டப்பாடியில் இருந்து மழவன் சேரம்பாடி செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகின்றன. அவை இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. அத்துடன் புதர்களால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நின்றால் கூட தெரிவது இல்லை. எனவே அங்குள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 11:16 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#56305

அடிக்கடி விபத்துகள்

சாலை

கோவை சின்னவேடம்பட்டியில் இருந்து அத்திப்பாளையம் பிரிவு வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அந்த சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே விபத்துகளை தடுக்க சாலைைய சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 11:15 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#56304

கடும் துர்நாற்றம்

கழிவுநீர்

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் அங்கு மண்ணும், குப்பையும் அடைத்து கிடந்தது. தற்போது பெய்து வரும் மழையில் கால்வாயில் இருந்து சாலையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 11:14 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#56303

சேறும், சகதியுமான சாலை

சாலை

துடியலூர் சேரன் காலனியில் பாதாள சாக்கடை அமைக்க சாலையில் குழி தோண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த குழியை மூடவில்லை. தற்போது மழை பெய்து வருவதால், அந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே குழியை உடனடியாக மூடி சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 11:13 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#56302

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

பந்தலூர் அருகே பந்தப்பிளாவில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். சிலர், குடிநீர் தேடி நீர்நிலைகளுக்கு அலைந்து திரிகின்றனர். எனவே அந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 11:13 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#56301

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டியில் இருந்து பழைய நெல்லியாளம் வரை சாலை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது மழை பெய்து வருவதால் அந்த சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 12:10 PM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#56165

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு கனகுபிள்ளை வீதியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால் மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick