Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 April 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30185

தேங்கி நிற்கும் மழைநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சில இடங்கள் தாழ்வான பகுதி என்பதால் மழை காலங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இதனால் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஆஸ்பத்திரியில் மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களை சரி செய்து மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30183

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து குப்பம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த சாலை முழுவதும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜெகதீஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30182

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் உள்ளன. மேலும் சின்ன எலசகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முத்துமாரியம்மன் கோவிலை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில், கோவில் முன்புறமுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30181

மாணவர்களுக்கு இடையூறு

மற்றவை

கிருஷ்ணகிரி நகரத்தில் பஸ் நிலையத்தை ஒட்டியவாறு மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் போட்டி தேர்வுக்கு படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினந்தோறும் வந்து படித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வளாகத்தின் முன் உள்ள மரங்களின் நிழலில் அமர்ந்து சாப்பிடவும் செய்கின்றனர். இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் உள்ள கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தினந்தோறும் நூலகத்தின் முன் மரங்களிடையே கட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன், நூலகத்திற்குள்ளும் கால்நடைகளின் துர்நாற்றம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30179

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

ஓசூர் மாநகராட்சி 35-வது வார்டு எம்.ஐ.ஜி. குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#29980

நிழற்கூடம் தேவை

சாலை

சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள பால்பண்ணை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வயதானவர்கள், குழந்தைகள், பஸ்சுக்காக வெகு நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி அங்கு நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.-சாம்ராஜி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29978

வேகத்தடை அவசியம்

சாலை

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பஸ் நிறுத்தம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதன் அருகிலேயே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த பகுதியில் 4 ரோடுகள் சந்திக்கின்றன. எனவே ஜலகண்டாபுரம்-நங்கவள்ளி மெயின் ரோட்டில் வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. விபத்து ஏற்படுவதற்கு முன்பு வேகத்தடை அவசியம் அமைக்க வேண்டும்.-அர்ஜூன், வனவாசி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29977

திறக்கப்படாத கட்டிடம்

திறக்கப்படாத கட்டிடம்மற்றவை

சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் பயன்பாட்டுக்கு வாகன நிறுத்த கட்டிடத்தை திறப்பார்களா?-வேலுமணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29975

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் அன்னதானப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து தியேட்டர் வரை பாதாள சாக்கடைக்காக சங்ககிரி மெயின் ரோட்டில் குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் சைக்கிளில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்துகள் நடப்பதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சாகுல் அமீத் கான், அன்னதானப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29971

டாஸ்மாக் கடையை இடம் மாற்ற வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மின்னக்கல் சாலையில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள பார் 24 மணி நேரமும் சந்துக்கடையாக செயல்படுகிறது. அங்கு கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி மதுப்பிரியர்கள் குடிக்கிறார்கள். மேலும் அவர்கள் அந்த பகுதியில் நின்று கொண்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நெடுஞ்சாலை ஓரமாக உள்ளதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பார் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29970

ரேஷன் கடையை சூழ்ந்த மழைநீர்

தண்ணீர்

சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில், மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரேசன், ஆர்.பி.புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29969

பூட்டியே கிடக்கும் பொதுகழிப்பிடம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலைவாழ் மக்கள் செம்மேட்டில் உள்ள அரசு அலுவலகம், மருத்துவமனை ஆகியவற்றிக்கு தினமும் தங்கள் தேவைக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் செம்மேடு பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொதுகழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுகழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-ஜெயவேல்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick