Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 March 2023 4:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29968

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் தோப்பூர் அடுத்த மோளக்கவுண்டனூர் பிரிவு அருகே சாலை ஓரத்தில் குடிதண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி அந்த பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளது. கோடைகாலத்தில் வீணாகும் குடிநீரால் அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். இதனால் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஸ், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29967

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே, அசோக் லேலண்ட்-2 கம்பெனி எதிரில் காந்தி நகரரில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில், காந்தி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. அதன் அருகே கடந்த ஒரு வாரகாலமாக கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் பரவி ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதையன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29966

வேகத்தடைக்கு வர்ணம்

சாலை

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலை, சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு, காந்தி ரோடு போன்ற பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?ரமேஷ் கிருஷ்ணகிரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29965

பழுதடைந்த நிழற்கூடம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி காலனி அருகில் இருந்து மரிமாணப்பள்ளி பிரிவு ரோட்டில் உள்ள நிழற்கூடம் பழுதடைந்து பராமரிப்பின்றி உள்ளது. மேலும் அந்த நிழற்கூடம் அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள்ள இதனை அகற்றிவிட்டு புதிதாக நிழற்கூடம் கட்ட வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மணி, மல்லப்பாடி காலனி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29964

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி அருகே உள்ள ராயல்டவுனில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் அந்த தெருநாய்கள் சிறுமியை கடிக்க துரத்தியது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள அந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே!-நாகு, மத்திகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29963

மூடப்படாத குழி

மூடப்படாத குழிசாலை

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 13-வது வார்டுக்கு உட்பட்ட போலீஸ் காலனி 8-வது குறுக்கு தெருவில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் கேட் வால்வு வைக்க குழி தோண்டப்பட்டது. அந்த குழி நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இந்த வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் குழியை கவனிக்காமல் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தவிர்த்திட குழியை மூட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோ.செந்தில், போலீஸ் காலனி, பாப்பாரப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29962

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து வெள்ளிசந்தை, குண்டாகனூர், சின்னவரட்டம்பட்டி, திம்மராயனஅள்ளி, வெலகலஅள்ளி, ஆலப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஏராளமான மாணவர்கள் செல்கின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்களும் ஏராளமானோர் உள்ளனர். இந்தநிலையில் அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து இந்த புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கினால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும். -விக்னேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29961

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி மந்திரி கவுண்டர் தெரு 13-வது வார்டில் சாக்கடை கால்வாய் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் நீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகரித்து நோய் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்தபடி செல்லும் அவலநிலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 4:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29959

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அத்தி மூட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மாரண்டஅள்ளி வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால் இந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அகரம் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பரமசிவம், அகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29753

குடிநீர் வழங்க வேண்டும்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து காணாம்பாளையம் குடித்தெரு வடக்கு காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?-பழனிவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29752

பெயர் திருத்தம் செய்யப்படுமா ?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதூரில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை விளம்பர பலகையில் நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக "நெடுச்சாலை" என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திருத்தி எழுத வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.-சந்தோஷ், ராமநாதபுரம் புதூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:26 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29751

சுற்றுசூழல் பாதிப்பு

குப்பை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையோரம் ஒரு சாயப்பட்டறை உள்ளது. இந்த சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் ஆற்று நீர் மாசடைகிறது. மேலும் சுற்றுசூழலுக்கும் பாதிப்படைகிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரவி, பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick