Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 April 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30396

பயன் இல்லாத எந்திரம்

மற்றவை

ஓசூர் உழவர் சந்தையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. எந்திரம் நிறுவப்பட்டு 2 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. மேற்கொண்டு புதிய பைகள் நிரப்பப்படாததால் பயன் இல்லாத நிலையில் இருப்பதுடன் மின்சாரமும் வீணாகிறது. உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள் பலர், மஞ்சள் பையை பெற அந்த எந்திரத்தை நாடி செல்வதும், பைகள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்து நெகிழிப்பை தேடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த எந்திரத்தில் மஞ்சள் பையை நிரப்பி தொடர்ந்து இயங்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30395

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் ஊராட்சி எக்கூர்- காமாட்சி கொட்டாய் இருளர் காலனிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலநேரங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.-செல்வகுமார், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30392

மேம்பாலம் பணிகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் சாலையில் ஏரிக்கரை கிராமத்தின் அருகே கடந்த 2 ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் நூற்றுகணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.-ராஜேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#30204

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா ?

மற்றவை

சேலம் 59-வது வார்டுக்கு உள்பட்ட சிவசக்தி நகர் 5-வது தெருவில் மழைகாலங்களில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கால்வாயும் ஆங்காங்கே முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் அவதியடைகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மழைகாலங்களில்மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:08 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30203

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

சேலம் 6-வது வார்டு ஸ்ரீராம் நகரில் கழிவுநீர் கால்வாய் சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சேகர், ஸ்ரீராம் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30202

சாலையில் செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் புதுப்பாளையத்தில் இருந்து வரும் கழிவு நீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் வெளியேறும் கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நடராஜன், வாழப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30201

சாலை அமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து ஓ.சவுதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அறமத்தாம்பாளையம் பகுதியில் இருந்து சீராய்கோவில் வரை உள்ள சாலை புதுப்பிப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் பல மாதங்களாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழனிவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30200

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியில் கருவாட்டு ஆறு உள்ளது. அதன் அருகே உள்ள சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் வேகமாக செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-குமார், காரவள்ளி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30198

தெருநாய்களால் அச்சம்

மற்றவை

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய வீதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி பயமுறுத்துகின்றன. மேலும் குழந்தைகளை கடித்து விடுகின்றன. வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30190

பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிலையம் வழியே நகர பஸ்கள் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கிறது. ஆனால் சேலம், பெங்களூரு, ஈரோடு செல்லும் புறநகர் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நல்லம்பள்ளி பஸ் நிலையம் வழியாக வந்து செல்வதில்லை. இதனால் புறநகர் பஸ்சுக்காக, பயணிகள், நல்லம்பள்ளியில், லளிகம் சந்திப்பு சாலை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையின் இருபுறமும், வெயில் மட்டும் மழையில் நின்று தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணிகளின் நலன்கருதி, புறநகர் பஸ்கள், நல்லம்பள்ளி பஸ் நிலையம் வழியாக வந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30188

காணாமல் போன தார் சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் இருந்து சிடுவம்பட்டி வழியாக பென்னாகரம் செல்லும் தார் சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- மணிகண்டன், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30187

கழிவு நீரால் சுகாதார கேடு

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே கூர்க்கம்பட்டியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவு நீரை வெளியேற்ற முறையான வசதிகளை ஏற்படுத்தவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை சீரமைத்து கழிவு நீர்முறையாக வெளியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-விஜயகாந்த், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick