Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 April 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#30415

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி 58-வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தெருநாய்கள் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கோபால், கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30413

சாலையில் செல்லும் கழிவு நீர்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவு நீர் அடிக்கடி வெளியேறி சாலையில் செல்கிறது. இதை அவ்வபோது சுத்தம் செய்து விடுகிறார்கள் ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வுகான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-.தினேஷ்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#30412

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் உள்ள சண்முகநகர் எஸ்.ஆர்.எம். தோட்டம் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்கடிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-திருமூர்த்தி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30411

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் சாலை ஓரங்களில் குக்கிராமங்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் பாலப்பட்டிக்கும், எஸ்.வாழவந்திக்கும் இடையில் உள்ள வேட்டுவம்பாளையம் பிரிவு ரோடு அருகே குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பசுபதி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30410

விபத்து அபாயம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்தை சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே மேம்பாலம் அமைப்பதற்காக சாலை ஓரமாக கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டது. இந்த நிலையில் அதற்காக தோண்டப்பட்ட மண் வழியிலேயே போடப்பட்டுள்ளது. பல மாதங்களாகியும் கழிவுநீர் கால்வாய் பணி முடிக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?-ஏகாம்பரம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30408

கழிவுநீர் கால்வாயை விட பள்ளமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி 7-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாயை விட சாலை பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் சாக்காடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் மழை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும்.-சுரேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#30407

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியில் உள்ள நெசவாளர் காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-நேசகுமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:04 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30405

நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி- ராயக்கோட்டை சாலையில் இ.பி. அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.-ஜெயக்குமார், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:04 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30403

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி நகரில் சத்திரம் சாலையில் நாள்தோறும் காய்கறி கடைகள் சாலை ஓரங்களில் செயல்படுகின்றன. இந்த சாலை சேதமடைந்து உள்ளதால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாலையில் வேகமாக செல்வோர் விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கருணாநிதி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30402

வாகனம் நிறுத்துமிடமாக மாறிய பஸ் நிலையம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பெரும்பாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பென்னாகரம் மேச்சேரி வழியே செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தாமல் மெயின் ரோட்டிலேயே நின்று செல்வதால் பஸ் நிலையம் பயன்பாடு இன்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த இடத்தை வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.-மாதையன், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30401

தெருவிளக்கு எரிய நடவடிக்கை

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சின்னப்பாவளி பகுதியில் தெருவிளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தெருவிளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முனியப்பன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30399

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சென்னை சாலை, சேலம் சாலை, பெங்களூரூ சாலை, சப்-ஜெயில் ரோடு, காந்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியே இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக எரியாத மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick