Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 April 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30635

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 7-வது வார்டு சின்ன ஏரிக்கரை சுடுகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது. இந்த குப்பைகளுக்கு தினந்தோறும் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியே செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் உடல் நலம் பாதிப்படைகிறார்கள். எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும்.-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30634

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ரஹார நாட்டாமங்கலம் ஊராட்சியில் உள்ள சின்ன அக்ரஹாரம் சாலை சேதமடைந்து உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.-பூபாலன், அயோத்தியாப்பட்டணம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30632

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் அன்னதானப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து தியேட்டர் வரை பாதாள சாக்கடைக்காக சங்ககிரி மெயின் ரோட்டில் இருந்து குழி தோண்டப்பட்டது. தற்போது சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சாகுல் அமீத் கான், அன்னதானப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#30631

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தெற்கு மூப்பரன் தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதம் அடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.-வீரதேவன், கச்சுப்பள்ளி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30629

கோவிலை புதுப்பிக்க கோரிக்கை

மற்றவை

பாலக்கோடு கடைத்தெருவில் தர்மராஜா கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. தற்போது கோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்து உடைந்து கீழே விழுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-முருகன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30628

நோய் பரவும் அபாயம்

குப்பை

தர்மபுரி மாவட்டம் தடங்கம் மற்றும் எ.ஜெட்டிஅள்ளி ஆகிய ஊராட்சிகள் சந்திக்கும் எல்லை பகுதியில் உள்ளது அவ்வைவழி ரெயில்வேகேட். இந்த ரெயில்வேகேட் சந்திப்பில் இருந்து பெருமாள் கோவில்மேடு கிராமத்திற்கு செல்லும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ரெயில்வே தண்டவாளத்தையொட்டி கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.-ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30627

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு ஊராட்சிக்கு உட்பட்ட மைய பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு சில மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கோவிந்தன், அத்தி மூட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#30625

நகர பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா பெரியப்பட்டியில் காந்தி நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் முதியோர்களும் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே அரூரில் இருந்து நரிப்பள்ளி, இருக்கலூர் வழியாக காந்தி நகருக்கு நகர பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பாகிருஷ்ணன், அரூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30624

குண்டும், குழியுமான சாலைகள்

சாலை

ஓசூர்- பெங்களூரு சாலையில் இருந்து தனியார் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சீனிவாசன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30623

குண்டும், குழியுமான சாலைகள்

சாலை

ஓசூர் அருகே மத்தம் பகுதியிலிருந்து அரசனட்டிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகவும் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள், பள்ளி மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீனிவாசன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30622

மின்வினியோகம் வழங்க கோரிக்கை

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகாவில் நாயக்கன்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 45 வீடுகளுக்கு மின்சார இணைப்பு இல்லை. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் மின்கம்பங்கள் அமைத்து மின்சார இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் மின்கம்பங்கள் அமைத்து அனைத்து வீடுகளுக்கும் மின் வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சந்தோஷ், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 April 2023 5:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#30621

பஸ் நிலைய பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் பாதியிலேயே நின்று விட்டது. பஸ் நிலையத்திற்கு உள்ளே பஸ்கள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பஸ் நிலைய விரிவாக்க பணிகளை உடனடியாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கண்ணபிரான், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick