9 April 2023 5:36 PM GMT
#30635
சுகாதார சீர்கேடு
சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 7-வது வார்டு சின்ன ஏரிக்கரை சுடுகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது. இந்த குப்பைகளுக்கு தினந்தோறும் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியே செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் உடல் நலம் பாதிப்படைகிறார்கள். எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும்.
-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.